மாவட்டத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது

மாவட்டத்தில் புதிதாக 108 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது.

Update: 2020-08-30 23:09 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தநிலையில், சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 985 ஆக உயர்ந்து 6 ஆயிரத்தை நெருங்கியது.

மாவட்டத்தில் நேற்று 95 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 595 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர்.

3 பேர் பலி

மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதுக்கோட்டையை சேர்ந்த 67 வயது முதியவர், 69 வயது முதியவர், 75 வயது முதியவர் ஆகியோர் என மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1, 297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம், பெருங்குடி அருகே உள்ள பூவம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தநிலையில் மதகம் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், 38 வயது பெண் மற்றும் ஏம்பல் அம்பாள் நகர் பகுதியை சேர்ந்த 36 வயது ஆண், 17 வயது சிறுமி ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏம்பல் பகுதியில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கறம்பக்குடி, ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களான சோத்துபாளையில் 40 வயது பெண், பீமாத்தூரில் 43 வயது பெண், அன்னம்மாள்புரத்தைச் சேர்ந்த 24 வயது ஆண் உள்பட 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கறம்பக்குடியில் நேற்று கூகைப் புழையான்கொல்லையை சேர்ந்த 4 பேருக்கும், கறம்பக்குடி செட்டித் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் என 5 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

மேலும் செய்திகள்