மதுரையில் இடி-மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை: பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன

மதுரையில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

Update: 2020-09-03 22:00 GMT
மதுரை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மதுரை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், மதுரையில் நேற்று காலையில் முதல் வெயில் சுட்டெரித்தது.

இதற்கிடையே, மாலை 6 மணி அளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறியை வெளிப்படுத்தியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் மதுரையின் நகர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதுபோல், அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்ற காட்சிகளை காணமுடிந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழையாக நீடித்தது.

மழையின் காரணமாக, ஜீவாநகர், கீழமாசிவீதி, நகைக்கடை பஜார் உள்ளிட்ட பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதுபோல், கர்டர் பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீரில் கார் ஒன்று சிக்கியது. இதனை அறிந்த திடீர்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் சிக்கிய காரை மீட்டனர்.

மேலும் செய்திகள்