வருகிற 12-ந் தேதி முதல் 40 ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு

வருகிற 12-ந்தேதி முதல் 40 ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

Update: 2020-09-06 20:31 GMT
பெங்களூரு,

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் பஸ், ரெயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்குள் பஸ் போக்குவரத்தும், மாநிலங்கள் இடையே விமான போக்குவரத்தும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் கடந்த மாதத்தில் இருந்து சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தென்மேற்கு ரெயில்வே சார்பில் 40 ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் மறுமார்க்கத்தில் புறப்படும் 40 ரெயில்களும் இயங்கும். ஆகமொத்தம் 80 ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. வருகிற 12-ந் தேதி முதல் இந்த ரெயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

முகக்கவசம் கட்டாயம்

சில குறிப்பட்ட தடங்களில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன. இது தவிர மேலும் 7 சிறப்பு ரெயில்களின் போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் பெங்களூரு-மைசூரு, பெங்களூரு கன்டோன்ட்மெண்ட்-கவுஹாத்தி, யஷ்வந்தபுரம்-பிகனேர், மைசூரு-ஜெய்ப்பூர், மைசூரு-சோலாப்பூர், கோரக்பூர்-யஷ்வந்தப்புரம்-பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் இடையே இயக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் சமூக விலகலை பின்பற்றவது, தெர்மல் ஸ்கேனருக்கு உட்படுத்துவது, பயணிகள் முகக்கவசம் அணிவது போன்றவற்றை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

மேலும் செய்திகள்