சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

Update: 2020-09-15 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தூத்துக்குடியில் ரவுடித்தனம், கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சீர்செய்யவும் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், போலீஸ் நிலைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

ஆய்வின்போது தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்