தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி டெல்டாவில், ஒரே நாளில் 348 பேருக்கு தொற்று

தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். டெல்டாவில் ஒரே நாளில் 348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-09-17 01:36 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 751 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 155 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 652 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 964 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண், 75 வயது ஆண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 135 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,678 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 165 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 65 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 746 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 71 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 390 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

நாகை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 71 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 155 பேர் நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 ஆயிரத்து 242 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 1,077 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்