குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-17 01:55 GMT
நாகர்கோவில்,

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரியாஸ் அகமது, கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று இடமாற்றப்பட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சொர்ணபிரதாபன் தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) பதவி உயர்த்தப்பட்டார்.

அகஸ்தீஸ்வரம் வட்டம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய கந்தசாமி, தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) பணி மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகன், மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக தலைமை உதவியாளரான சரஸ்வதி, தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) இருந்த ஆறுமுகம் தற்போது தோவாளை வட்டம் மண்டல துணை தாசில்தாராகவும், தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) இருந்த குழந்தைராணி நாச்சியார் தற்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

துணை தாசில்தாராக பதவி உயர்வு

நாகர்கோவிலில் உள்ள உதவி ஆணையர்(ஆயம்) அலுவலத்தில் 2-ம் நிலை கணக்கராக பணியாற்றிய பாலதீபா தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளராக(எல் பிரிவு) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் அகஸ்தீஸ்வரம் வட்டம் தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த தனலட்சுமி பதவி உயர்வின் மூலம் தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்