விழுப்புரம் நகரில் 40 இடங்களில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் நகரில் 40 இடங்களில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

Update: 2020-09-21 05:49 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அஜிஸ்நகர், அலமேலுபுரம் மெயின்ரோடு, சிங்காரத்தோப்பு, ராஜீவ்காந்தி நகர், சரஸ்வதி நகர், சாலாமேடு ஹவுசிங்போர்டு, ஸ்ரீராம் நகர், பானாம்பட்டு சாலை, ஜெகநாதன் நகர் மெயின்ரோடு, அண்ணாமலை நகர் உள்ளிட்ட 40 இடங்களில் ரூ.5 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 40 இடங்களிலும் சாலை மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கிற ரகுராமன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ் குமரன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர், நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் விஜயகுமார், வரதன், இளைஞரணி நிர்வாகி மின்னல்சவுக், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஜியாவுதீன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்