கீழையூர் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு

கீழையூர் ஒன்றிய பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.

Update: 2020-09-24 03:01 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் கலெக்டர் பிரசாந்த், கீழையூர் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சேருதூர் மீனவர் கிராமத்தில் மீன் உலர் தளம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தையும், அங்கு பனை விதை மற்றும் தென்னங்கன்று நடவு செய்ததையும், காமேஸ்வரம் மீனவர் கிராமத்தில் குடிமராமத்து பணியையும், மீனவர் காலனி பகுதியில் பாலம் கட்டுமான பணியையும் பார்வையிட்டார். மேலும் விழுந்தமாவடி ஊராட்சியில் மீனவர் காலனி பகுதியில் புதிய பாலம் அமைக்க உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் வெண்மணச்சேரி ஊராட்சியில் சக்கிலியன் வாய்க்கால் குறுக்கே ஏகராஜபுரத்தில் இருந்து காடந்தேத்தி செல்லக்கூடிய பாலம் முழுமையாக சேதம் அடைந்திருந்தது. அதனை பார்வையிட்டு பாலம் கட்டுமான பணி தொடங்குவதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வு

அதேபோல் வெண்மணச்சேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார். பின்னர் கீழையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், செந்தமிழ் செல்வம் (கிராம ஊராட்சி), உதவி செயற்பொறியாளர் பேபி, பொறியாளர்கள் பாலச்சந்திரன், வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்