ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,628 ஆக உயர்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனனால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-24 22:30 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிபாக்கம், திமிரி பகுதிகளைச் சேர்ந்த 69 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை நகரை பொறுத்தவரை ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த 21 வயது ஆண், பிஞ்சி நடுத்தெருவை சேர்ந்த 15 வயது ஆண், நவல்பூர் வி.எம்.தெருவை சேர்ந்த 29 வயது பெண், மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 51 வயது ஆண், வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், செட்டி தாங்கல் மேட்டு தெருவைச் சேர்ந்த 32 வயது ஆண், 34 வயது ஆண், வாணாபாடி தமிழன்னை வீதியை சேர்ந்த 23 வயது பெண், சிப்காட் எமரால்டு நகர் பகுதியை சேர்ந்த 48 வயது பெண், பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், 36 வயது ஆண், நரசிங்கபுரம் பெல் சர்ச் தெருவை சேர்ந்த 46 வயது பெண், நரசிங்கபுரம் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 39 வயது ஆண், லாலாபேட்டை மேலண்டை தெருவை சேர்ந்த 31 வயது ஆண், ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 511 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்