நவராத்திரி கொண்டாட்ட வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மராட்டியத்தில் நவராத்திரி கொண்டாட்ட வழிபாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-09-29 21:26 GMT
மும்பை,

மும்பையில் ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி மண்டல்களில் 4 அடி உயரம் வரையிலும், வீடுகளில் 2 அடி வரையிலும் தேவி சிலைகளை வைத்து வழிபாடு செய்ய முடியும். மேலும் சாமி வழிபாடு செய்ய வருபவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விழிப்புணர்வு

இதேபோல பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்தே சாமி தரிசனம் செய்ய முடியும். இதேபோல ராவணனை எரிக்கும் நிகழ்வில் குறைந்த அளவில் மட்டுமே மண்டலை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும். முடிந்த வரை சாமி தரிசனத்தை ஆன்லைன் மூலம் நடத்த மண்டல் நிர்வாகிகளை அரசு வலியுறுத்தி உள்ளது.

இதேபோல மண்டலை சேர்ந்தவர்கள் டெங்கு, மலேரியா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்