தூத்துக்குடி, கோவில்பட்டியில் கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-30 23:47 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் பர்னபாஸ், பொருளாளர் சிவசூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் போஸ்டல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமப்புற தபால் ஊழியர்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சுந்தரம், சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

இதேபோல் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட தலைவர் நெல்லையப்பன், கிளை தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். கோட்ட செயலர் ராஜா, கோவில்பட்டி கிளை செயலர் பிச்சையா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கிளை பொருளாளர் பட்டுராஜன், சங்கரன்கோவில் கிளை செயலாளர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்