சிறப்பு கண்காணிப்பு அதிகாரி காகர்லா உஷா சோதனை கொரோனா ஒழிப்பு, பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஈரோடு மாவட்டத்துக்கான சிறப்பு கண்காணிப்பு அதிகாரி காகர்லா உஷா நேற்று பார்வையிட்டு சோதனைகள் மேற்கொண்டார்.

Update: 2020-10-06 00:33 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கொரோனா ஒழிப்பு மற்றும் பருவ மழை பாதுகாப்பு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளருமான காகர்லா உஷா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று ஈரோட்டில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

நேற்று காலை அவர், ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதிகள், கொல்லம்பாளையம் ஓடை தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு சோதனை செய்தார்.

முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா ஒழிப்பு மற்றும் பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளுக்கான கூட்டத்தில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

உத்தரவு

கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாநகராஆட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி காகர்லா உஷா கலந்து கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரேம் ஞானக்கண் நிவாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மு.விஜயசங்கர், ஆர்.டி.ஓ.க்கள் சைபுதீன் (ஈரோடு), ஜெயராமன் (கோபி), மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், தாசில்தார் பரிமளாதேவி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்