தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

Update: 2020-10-07 18:57 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலைய ஆணையம் சார்பில் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சமுதாய காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி முதல் வாகைகுளம் வரை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகே மரக்கன்றை நட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி விமான நிலைய ஆணையம் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சாலையோரங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த மரங்களை 2 ஆண்டுகளுக்கு பராமரிப்பும் செய்யப்படுகிறது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செழியன், சித்தார்தன், உதவி பொறியாளர் தளவாய், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை உறுப்பினர்கள் சுரேஷ், மணிகண்டன் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்