மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் கைது புனேயில் சிக்கினார்

உள்துறை மந்திரிக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் போலீசில் சிக்கினார்.

Update: 2020-10-12 21:01 GMT
புனே,

மராட்டிய உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் அண்மையில் பேஸ்புக்கில் தெரிவித்து இருந்த கருத்திற்கு எதிராக அவதூறாக கருத்துகள் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சைபர்குற்றப்பிரிவு போலீசார் கடந்த 9-ந்தேதி வழக்கு பதிவு செய்தனர்.

அவதூறு கருத்து தெரிவித்த நபரை பிடிக்க 2 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு நவிமும்பை மற்றும் புனேவிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

கைது

இதில் அவதூறு கருத்து பதிவிட்டவர் உஸ்மானாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீசாயில் ஷர்னப்பா கஜ்ஜே (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தற்போது புனேயில் உள்ள சிக்லேவில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்