தென்காசி நகரசபை அலுவலகம் முன் பா.ஜனதாவினர் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரசபை அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2020-10-19 23:54 GMT
தென்காசி,

தென்காசி நகரசபை அலுவலகத்தில் புதிய வரி விதிப்பு மற்றும் பெயர் மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை மனுதாரர் மூலமாக மட்டும் வாங்க வேண்டும். அவற்றை வரிசைப்படி மட்டும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி கட்டப்படும் வீடுகளுக்கு அரசாணைப்படி திட்ட அனுமதி வரைபடம் கேட்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரசபை அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களிடம் ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர். இதில் முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இயக்குனர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, இந்து முன்னணி நகர தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட எஸ்.சி. அணி செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்