ராகுல்காந்தி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் விஜயதரணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜயதரணி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-10-25 06:14 GMT
நாகர்கோவில், 

கருங்கலில் 2015-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் நான் (விஜயதரணி) பேசும்போது, தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும். ஆனால், தமிழக அரசு கூடுதலாக டாஸ்மாக் சில்லறை மது கடைகளை திறந்து ஏழை மக்களை மது அடிமைகளாக மாற்றுகிறது என பேசியதற்கு முதல்-அமைச்சர் மீது களங்கம் ஏற்படுத்தி அவதூறு பரப்புவதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மக்கள் பிரதிநிதி தனது கடமையைதான் செய்தார் என கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. அந்த தீர்ப்பில் அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து பேசியது அவரது கடமை என்றும் அரசியலமைப்பு சட்டப்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை அடிப்படையில் மக்களின் கஷ்டங்களை போக்கவும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட பேசிய பேச்சு என்றும் முதல்-அமைச்சர் மீது அவதூறும், களங்கங்களும் சுமத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அரசியலில் பொது வாழ்க்கையில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அரசின் தவறுகளை சுட்டி காட்டுவது அவதூறான செயல் இல்லை என்று தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது.

தள்ளுபடி செய்ய வேண்டும்

இதுபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தள்ளுபடி செய்யலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்