கொரோனாவில் இருந்து 15 லட்சம் பேர் மீண்டனர் இன்னும் 1¼ லட்சம் பேருக்கு சிகிச்சை

மராட்டியத்தில் கொரோனாவினால் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது. இன்னும் 1¼ லட்சம் பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-10-30 19:45 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 72 ஆயிரத்து 411 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று மாநிலம் முழுவதும் மேலும் 127 பேர் கொரோனாவினால் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 837 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 241 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 3 ஆயிரத்து 50 ஆக அதிகரித்து உள்ளது. இன்னும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 418 பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 1, 145 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதுவரை நகரில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 505 ஆக உள்ளது.

மும்பையில் மேலும் 32 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 261 ஆக அதிகரித்து இருக்கிறது.

மேலும் செய்திகள்