கோவில்பட்டி நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு வாகனத்தில் ரோந்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்க வாகனத்தில் ரோந்து பணியை நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2020-11-12 16:45 GMT
கோவில்பட்டி, 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் மக்கம் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக நேற்று வாகனம் மூலம் கண்காணிக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தின் மூலம் குற்றச்செயல்களை தடுப்பதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். கூட்ட நெரிசலை களையவும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூடுதல் போலீசார் நியமனம்

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும், குற்றச் செயல்களை தடுக்கவும், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 4 சக்கர விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்யப்படும்.

கோவில்பட்டி நகருக்கு கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தற்போது கோவில்பட்டியில் தீபாவளியை முன்னிட்டு மட்டும் 25 போலீசார் ஆயுதப் படையில் இருந்து பணியிட மாற்றம் செய்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கோவில்பட்டி மேற்கு, கிழக்கு போலீஸ் நிலையங்களுக்கு மட்டும் 15 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்