தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Update: 2020-11-22 15:10 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்க மாவட்ட மலேரியா அலுவலர் முனுசாமி, மக்கள் நல அலுவலர் சரவணன், 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழுக்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதிகளில் 2 இடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட 2 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்