அருணாசலேஸ்வரர் கோவிலில் வினியோகிக்கப்படும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைலேஷ், சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-11-22 16:06 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைலேஷ், சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் பிரசாதம் தயாரிக்கும் இடம் சுத்தமாக வைக்க வேண்டும் என்றும், பிரசாதம் சுகாதாரமான நிலையில் வினியோகிக்க வேண்டும் என்றும் கோவில் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகரில் ஓட்டல், பேக்கரி, டீக்கடை உரிமையாளர்களுடன் தீபத்திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நியமன அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சானிடைசர் வழங்க வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியில் அமர இடவசதி செய்து கொடுக்க வேண்டும். கிருமி நாசினி தெளித்து அடிக்கடி கடையை சுத்தம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீர் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் தயாரிக்கும் இடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்