ஊரடங்கு தளர்வு எதிரொலி: மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் தூய்மைப்பணி

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நீச்சல் குளத்தில் தூய்மை பணி நடந்தது.

Update: 2020-12-02 00:04 GMT
புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்பு வருகிற 7-ந் தேதி முதல் தொடங்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நீச்சல் குளத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருந்த நீச்சல் குளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) அந்தோணி அதிர்ஷ்டராஜ் பார்வையிட்டார்.

கல்லூரி வகுப்புகள்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வரவில்லை எனவும், வந்தபின்பு நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னேற்பாடாக நீச்சல் குள வளாகத்தில் தூய்மை பணிகள் நடைபெற்றன. இதேபோல அரசு மகளிர் கல்லூரியில் வருகிற 7-ந் தேதி முதல் இறுதியாண்டு வகுப்புகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்