பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் துணிப்பையை தூக்க துணிவோம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-12-21 03:14 GMT
பெரியகுளம்,

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் துணிப்பையை தூக்க துணிவோம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்சாண்டர், பெரியகுளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், பெரியகுளம் வராகநதி மற்றும் நகரின் தூய்மையை காப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்