கொரோனாவால், சிற்பக்கலைஞர், தூக்குப்போட்டு தற்கொலை

கொரோனாவால் போதிய வருமானமின்றி மனமுடைந்த சிற்பக் கலைஞர் ஒருவர், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-21 23:47 GMT
கணேஷ்
சிற்பக்கலைஞர்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் சாலையில் வசித்து வந்தவர் கணேஷ் (வயது 24). சிற்பக்கலைஞர். திருமணமாகாத இவருடைய பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர் பல வெளியூர்களுக்கு சென்று கோவில்களில் சுதை சிற்பத்தில் சாமி சிலைகள் வடிவமைக்கும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் தன்னுடைய சகோதரர் களுடன் வசித்து வந்த இவர், கொரோனாவால் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாமால் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடி வந்துள்ளார். இதற்கிடையே தாய், தந்தை இல்லாத ஏக்கத்தில் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

தற்கொலை
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், நேற்று தனது வீட்டை விட்டு வெளியேறி மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் வளையான் குட்டை ரதம் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்