தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-12-23 04:28 GMT
தூத்துக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வருவாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, சின்னப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், வி.பி.ஆர்.ரமேஷ், மாநில அமைப்பு செயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை, தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட அவைத்தலைவரும் மாவட்ட வேளாண் விற்பனை குழு உறுப்பினருமான திருப்பாற்கடல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் விஜயகுமார், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

மேலும் செய்திகள்