கொட்டாரம் பகுதியில் 4 இடங்களில் 1000 ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் தளவாய்சுந்தரம் வழங்கினார்

கொட்டாரம் பகுதியில் 4 இடங்களில் 1000 ஏழை குடும்பங்களுக்கு தளவாய்சுந்தரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2020-12-30 05:11 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அச்சன்குளம், பெருமாள்புரம், கோட்டக்கரை, நரிக்குளம் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கொரோனா ஊரடங்கினால் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் வசிக்கும் ஏழைமக்கள் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்புபிரதிநிதி தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்தனர்.

உடனே அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தளவாய்சுந்தரம் அந்தப்பகுதியில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை தனது சொந்த நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி அச்சன்குளம், பெருமாள்புரம், கோட்டக்கரை, நரிக்குளம் காலனி ஆகிய 4 இடங்களில் வசிக்கும் ஏழைகுடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

1000 குடும்பங்களுக்கு

நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகரன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு செயலாளர் ராஜேஷ், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு 1000-ம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் அச்சன்குளம் சி.எஸ்.ஐ.சபைபோதகர் ஒனேசிமஸ் சகாயம், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் பாலமுருகன், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காட்வின் ஏசுதாஸ், துணைத்தலைவர் என்.எஸ்.சுரேஷ், கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் கண்ணன், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் செல்வம், இல.கி.கணபதி, அ.தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் தாணுலிங்கம், ஆறுமுகபுரம் அம்பேத்கர் மன்ற தலைவர் கார்த்திக்குமார், பெருமாள்புரம் ஊர்தலைவர் கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்