பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 150 பேர் உயிரிழப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மொத்தம் 500 சாலை விபத்துகளில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-01-05 00:02 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மொத்தம் 500 சாலை விபத்துகளில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். 651 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் மொத்தம் 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மாவட்டத்தில் 36 போக்சோ வழக்குகளும், 18 கஞ்சா வழக்குகளும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக 39 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை மீறியதாக 2 ஆயிரத்து 380 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 237 பேர் மீது வழக்குகளும், அவர்களுக்கு மொத்தம் ரூ.62 லட்சத்து 42 ஆயிரத்து 700 அபராதமும் விதிக்கப்பட்டது. நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 23 ஆயிரத்து 928 வழக்குகளும், அவர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 600 அபராதமும் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாராயம் 889.25 லிட்டரும், சட்ட விரோதமாக விற்பனை தொடர்பாக 67 ஆயிரத்து 407 லிட்டர் மது பானமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்