திருவாரூர் மாவட்டத்தில் 7,633 கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கலெக்டர் சாந்தா தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 7,633 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.57 லட்சத்து 24 ஆயிரத்து 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

Update: 2021-01-11 02:26 GMT
திருவாரூர்,

திருவாரூரில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி 2 கிலோ, பாசிபருப்பு 1 கிலோ, சமையல் எண்ணெய் 500 மி.லி., நெய் 100 கிராம், வெல்லம் 1 கிலோ, ஏலக்காய்- 5 கிராம், முந்திரி- 25 கிராம், திராட்சை 25 கிராம் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டியும், பெண் தொழிலாளர்களுக்கு புடவையும் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசால் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

7,633 பேருக்கு

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 6903 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் 730 ஓய்வூதியதாரர்கள் என 7, 633 பேருக்கு ரூ.57 லட்சத்து 24 ஆயிரத்து 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பாலசந்திரன், தாசில்தார் நக்கீரன், தொழிலாளர் நலத்துறை கண்கானிப்பாளர் பழனிவேல், உதவி கண்கானிப்பாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்