கடலூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-21 00:11 GMT
கடலூர்,

நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 19-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் துரை. சேகர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர்கள் முத்து பாபு, நரசிம்மன், மாவட்ட அமைப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட செயல் தலைவர் கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அல்லிமுத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநிலத் தலைவர் சரவணன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராசாமணி, முன்னாள் மாநில செயலாளர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் விவேகானந்தன், மாவட்ட பொருளாளர் நாகராஜன், செயலாளர் தங்கராசு, துணை தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்

மேலும் செய்திகள்