மராட்டியத்தில் 1 லட்சம் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்படும் மந்திரி அனில்தேஷ்முக் தகவல்

மராட்டியத்தில் 1 லட்சம் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.

Update: 2021-01-24 22:52 GMT
மும்பை, 

நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. அலுவலகம் மற்றும் பாச்பவ்லி, டேகா ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் போலீசார் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

விழாவில் நாக்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரி நிதின் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் விழாவில் மந்திரி அனில் தேஷ்முக் பேசியதாவது:-

மாநில போலீஸ் வீட்டு வசதி கழகம் போலீசாருக்கு 1 லட்சம் குடியிருப்புகளை கட்ட உள்ளது. இதற்காக அவர்கள் 3 பிரமாண்ட வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கி உள்ளனர். ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசிடம் இருந்து இந்த திட்டங்களுக்கு நாம் உதவி பெற தேவையில்லை. இதற்கான அரசு ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்