பொது மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் - தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பொது மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-01 04:17 GMT
திருச்சி, 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு மற்றும் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணகுமாரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5, 068 பேர் மீது தொடரப்பட்டுள்ள குற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் பள்ளி மற்றும் அலுவலகங்களில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி மற்றும் கணினி சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்