விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-02-01 06:28 GMT
வேலாயுதம்பாளையம்:
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அருகம்புல்களாலும், அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின், சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் காகிதபுரம் வல்லபை விநாயகர் கோவில், புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில், ஈ.ஐ.டி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 
இதேபோல் நொய்யல் அருகே முத்தனூரிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் திருக்காடுதுறை, கரைப்பாளையம், மரவாபாளையம் குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், தவுட்டுப்பாளையம், புன்னம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், சேமங்கி, கோம்பு பாளையம், நல்லிகோவில், ஓலப்பாளையம், ஒரம்பு பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்