சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார்

கட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம், அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.

Update: 2021-02-01 23:10 GMT
சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர்கள் சண்முகம், பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் கமிஷனர் செந்தில்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 25-ந் தேதி சேலம் லைன்மேட்டில் அ.ம.மு.க. கட்சி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவதூறாக பேசி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி

இதேபோல் சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. துணை செயலாளர் வினாயகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஒரு புகார் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கினார். இந்த நிலையில் சசிகலா தனது காரில் அ.தி.மு.க. கட்சிக்கொடியை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளார். இது கண்டனத்துக்குரியது.

எனவே அ.தி.மு.க. கட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதி்ல் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்