விநாயகர் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை

விநாயகர் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை

Update: 2021-02-09 06:54 GMT
விநாயகர் கோவில்களில் குத்துவிளக்கு பூஜை
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே பாத்தம்பட்டியில் உள்ள ராஜகணபதி கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி, ராஜகணபதிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜகணபதிக்கு சந்தனக்காப்பு சாத்தப்பட்டு  தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல ஆலங்குடி அருகே உள்ள ஆயிபட்டி கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு பூஜை செய்தனர். இதில் மேலக்கோட்டை, ஆயிபட்டி பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்