பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

சாத்தூர் அருேக பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தி்ல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-02-14 19:56 GMT
தாயில்பட்டி, 
சாத்தூர் அருேக பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்தி்ல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 
வெடி விபத்து 
சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 
மேலும் காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, சாத்தூர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு விபத்து நடந்த ஆலையை தமிழக வருவாய்த் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 
நாக்பூர் உரிமம்
பட்டாசு விபத்தில் தரைமட்டமான அறைகளையும், சேதமடைந்த அறைகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது பட்டாசு விபத்து சம்பவம் குறித்து கலெக்டர் கண்ணன் கூறினார். பின்னர் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையை நேரில் பார்க்க வேண்டும் என வருவாய் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி கேட்டுக்கொண்டதன் பேரில் வெம்பக்கோட்டை அருகே உள்ள சூரார்பட்டி பட்டாசு ஆலையை பார்வையிட்டனர். 
அங்கு ராக்கெட், புஸ்வானம், மருந்து கலவை தயாரிக்கும் இடம், வெடிமருந்து செலுத்தும் இடம் ஆகியவற்றை தனி, தனியாக பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கண்ணன் பட்டாசு தயாரிக்கும் முறை குறித்து அவரிடம் விளக்கி கூறினார். 

மேலும் செய்திகள்