ஆசனூர் அருகே வாகனங்களை மறித்த ஒற்றை யானை; போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே வாகனங்களை ஒற்றை யானை மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-02-17 00:02 GMT
தாளவாடி
ஆசனூர் அருகே வாகனங்களை ஒற்றை யானை மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
நெடுஞ்சாலையில் யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்தநிலையில் யானைகள் காட்டுக்குள் இருந்து வெளியேறி அடிக்கடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கம். 
இந்தநிலையில் ஆசனூர் அருகே திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரேபாளையம் பிரிவு என்ற இடத்தில் திடீரென ஒரு யானை வந்து நின்றது. 
போக்குவரத்து பாதிப்பு
யானையை பார்த்த கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டார்கள். சுமார் 30 நிமிடம் யானை ரோட்டிலேயே அங்கும் இங்கும் உலா வந்தது. 
இதை பயன்படுத்தி ஒரு சிலர் செல்போனில் யானையை படம் பிடித்தார்கள். பின்னர் யானை தானாகவே காட்டுக்குள் சென்றுவிட்டது. 
யானை ரோட்டிலேயே நின்றதால் திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்