மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

Update: 2021-02-18 19:43 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே காருகுடி பகுதியில் ஆற்றுபடுகையில் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து சென்று மணலுடன் லாரியை பறிமுதல் செய்து சித்தூர் ராஜன்பாபு(வயது 30) என்பவரை பிடித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.. இதேபோல, அந்த பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வன்னிவயல் சதீஷ், காருகுடி ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்புல்லாணி அருகே பிச்சாவலசை சுடுகாடு அருகில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி மாரிமுத்து என்பவர் அங்கு சென்று லாரியை பறிமுதல் செய்தார். தப்பி ஓடிய பொக்காரனேந்தல் பசீர்அலி(32), கண்ணன், வீரன்வலசை முனீஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்