ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடக்கம்

ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் பணிகள் தொடக்கம்.

Update: 2021-02-22 16:23 GMT
ஊத்துக்கோட்டை, 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசுபஸ் பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையிலிருந்து பஸ்கள் சென்னை, திருவள்ளூர், பூந்தமல்லி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, திருச்சி, நெல்லூர், திருப்பதி, மற்றும் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் ஊத்துக்கோட்டை மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில், பஸ் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் கோடை மற்றும் மழை காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இங்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.80 லட்சம் ஒதுக்கியது.

இந்த நிதியை கொண்டு பஸ்நிலையத்தில் மேற்கூரை, மதில் சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கியுள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்