கல்லூரி மாணவ, மாணவிகள் ஊர்வலம்

மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக்காக கல்லூரி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2021-02-22 18:36 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரீவெங்டபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ெசன்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குபேட்டை, ரோவர் வளைவு, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதில் பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், உதவி ஆணையர் (கலால்) ஷோபா, தாசில்தார் சின்னதுரை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்