ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்த பணம் போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

குண்டடம் அருகே ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்தது. அந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-02-23 18:56 GMT
குண்டடம்
குண்டடம் அருகே ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்தது. அந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கேட்பாரற்று கிடந்த பணம்

வழியில் ஒரு ரூபாய் கிடந்தாலே ஒருவருக்கும் தெரியாமல், எடுத்து பதுக்கி வைக்கும் காலமிது. பணம், பணமென்னு காலமெல்லாம் பணத்துக்காக ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறார்கள். ஊரார் சொத்துக்கு உரிமை கொண்டாடுவோர் நிறைந்து இருக்கும் நிலையில், கேட்பாரற்று  கிடந்த பணம், மற்றும் நகையை உரியவரிடம் ஒப்படைக்கும் உயந்த உள்ளம் கொண்டவர்களும் இன்னும் இருக்கிறார்கள். அந்த வகையில் குண்டடம் பகுதியில் ஒரு ஏ.டி.எம்.மில் கிடந்த பணத்தை வாலிபர் ஒருவர்  போலீசில் ஒப்படைத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
குண்டடம் அருகே உள்ள மேட்டுக்கடையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், சதீஷ்குமார் (வயது 28). இவர் நேற்று காலை 11 மணி அளவில் குண்டடம்- கோவை ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்கும் பகுதியில் ரூ.10 ஆயிரம் இருந்தது. ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அந்த பணத்தை எடுத்த சதீஷ்குமார் நேரடியாக குண்டடம் போலீஸ் நிலையம் சென்று போலீசாரிடம் தகவல் தெரிவித்து அந்த பணத்தை ஒப்படைத்தார். 

பாராட்டு 

யாரோ ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க வந்தவர் தவறுதலாக விட்டுச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் வலைதளங்களில் பரவத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து சதீஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகள்