பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தினர் ஒப்பாரி போராட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-24 15:32 GMT
திருவொற்றியூர், 

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில் திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், வடசென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் காந்திமதி தலைமை தாங்கினார். தலைமை கழக பேச்சாளர் தேவி, மாநில துணைச்செயலாளர்கள் மாலதி, கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் விறகு, அடுப்பு ஆகியவற்றை தரையில் வைத்து தலைவிரிக்கோலமாக நெஞ்சில் அடித்தபடி ஒப்பாரி பாடல் பாடினர், பின்னர் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் கார்த்திக் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து மாநிலத் துணைச் செயலாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மகளிர் அணி நிர்வாகிகள், ஆனந்தி, குணசுந்தரி, ராஜ புஷ்பம், தனபாக்கியம் தாரா, விஜயா உள்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்