போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்: பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிப்பு

போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

Update: 2021-02-26 20:16 GMT
போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். நேற்று முன்தினம் போராட்டம் தொடங்கியது.
நேற்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலை ரோடு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு டிரைவர்-கண்டக்டர் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரமம்
நேற்று பணியாளர்கள் குறைந்த அளவில் பணிக்கு வந்தனர். 70 சதவீதத்துக்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தற்காலிக பணியாளர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே பஸ்களை இயக்குவதில் பெரிய பாதிப்பு இல்லை. அனைத்து வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன’ என்றார்.
குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து பஸ்களிலும் நெருக்கியடித்துக்கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. தனியார் பஸ்கள் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் இயக்கப்பட்டன. மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களும் வழக்கம்போல இயங்கின.

மேலும் செய்திகள்