நாட்டு வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயம்

கோத்தகிரி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தொழிலாளி படுகாயமடைந்தனர்.

Update: 2021-02-27 22:49 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே பர்ன்சைடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 57). தொழிலாளி. இவர் நேற்று காலை 6 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.  அங்குள்ள ஓரிடத்தில் காட்டுப்பன்றியை விரட்ட பயன்படுத்துவதற்காக ‘அவுட்டு காய்’ என்ற நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது. அதனை சுப்பிரமணி தவறுதலாக கையால் தட்டி விட்டதால், அது கீழே விழுந்து வெடித்தது. 

இதில் அவர் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.  
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்பிரமணிக்கு ஏற்கனவே காட்டுப்பன்றியை நாட்டு வெடிகுண்டு வைத்து, வேட்டையாடிய வழக்கில் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்