விநாயகர் கோவில் திருவிழா

விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2021-02-28 18:44 GMT
நொய்யல்
நொய்யல் அருகே மறவாபாளையத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றிற்குசென்று புனித நீராடி தீத்த கூடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தாரை தப்பட்டைகள் முழங்க தீர்த்தகுடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் விநாயகர் கோவில் வளாகத்தில் பொங்கல், மாவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.. இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்