ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.2லட்சத்து 39 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-02-28 20:50 GMT
திருவையாறு:
உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.2லட்சத்து 39 ஆயிரத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை
தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குபட்ட செங்கிப்பட்டியில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி கஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன், ஏட்டுக்கள் கவுதமன், பிரபாகரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. பின்னர் காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா மஞ்சம்பட்டி கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் முருகேசன் (37) என்பதும், உரிய ஆவணமின்றி ரூ. 2.39 லட்சத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
கருவூலத்தில் ஒப்படைப்பு 
இதையடுத்து போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள்  அந்த பணத்தை பறிமுதல் செய்து  திருவையாறு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்த பணத்தை  திருவையாறு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா, உதவி தேர்தல்நடத்தும் அலுவலர் நெடுஞ்செழியன், தேர்தல்துணை தாசில்தார் விவேகானந்தன் ஆகியோர் திருவையாறு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்