கடையில் நகை அபேஸ் செய்த வாலிபர் சிக்கினார்

காட்டுமன்னார்கோவிலில் நகைக்கடையில் நகையை அபேஸ் செய்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-04 17:12 GMT
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் குமரன் (வயது 40). இவர் அதே பகுதியை சேர்ந்த பிள்ளையார் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நகை வாங்க  வந்தார். பின்னர் அவர் கடை உரிமையாளரிடம் 2 கிராம் எடையுள்ள 2 மோதிரத்தை வாங்கி பார்த்தார்.
 அந்த மோதிரங்களை கடை அருகில் நிற்கும்  எனது மனைவியிடம் காண்பித்து வருகிறேன் என்று கூறிவிட்டு மோதிரங்களுடன் அங்கிருந்து அந்த வாலிபர் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. அதன்பின்னரே அவர் மோதிரங்களை அபேஸ் செய்து கொண்டு சென்றது கடை உரிமையாளருக்கு  தெரிந்தது.  இது குறித்து குமரன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

5 மணி நேரம்

 விசாரணையில் நகையை அபேஸ் செய்து கொண்டு சென்றது  சிதம்பரம் கள்ளுக்கடை தெருவை சேர்ந்த தனசேகரன் மகன் சரவணன் (வயது 31) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் இதுபோல் வேறு ஏதாவது கடைகளில் நகை அபேஸ் செய்துள்ளாரா என்று மேற்கொண்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகையை அபேஸ் செய்த சம்பவத்தில் தொடர்புடைய வாலிபரை 5 மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்

மேலும் செய்திகள்