நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 410 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 410 காசுகளாக நிர்ணயம்.

Update: 2021-03-04 22:40 GMT
நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக சரிவடைந்து உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-430, ஐதராபாத்-375, விஜயவாடா-395, மைசூரு-433, மும்பை-460, பெங்களூரு-430, கொல்கத்தா-424, டெல்லி-387.

கறிக்கோழி கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.96 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சிவராத்திரி மற்றும் வெயிலின் தாக்கத்தால் தமிழகம் மட்டும் இன்றி, வடமாநிலங்களிலும் முட்டை நுகர்வு சரிவடைந்து உள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்