பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆலோசனை நடத்தினர்.

Update: 2021-03-05 01:30 GMT
செங்கல்பட்டு கலெக்டர்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆலோசனை நடத்தினர்.

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், “வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் வந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்