கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா

பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது.

Update: 2021-03-06 01:22 GMT
கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தனப்பள்ளி கிராமத்தில் 2-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்கும் காளைகளை கால்நடைத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பங்கேற்க அனுமதித்தனர். இந்த விழாவுக்காக சாலையின் இருபுறங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதன் இடையே காளைகளை ஓட விட்டனர். அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை  கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்