பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-03-06 21:00 GMT

திருச்சி, மார்ச்.7-
தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில துணைத்தலைவர் காளப்பட்டி பொன்னுசாமி தலைமை தாங்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும். வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்