கேக் வெட்டி மகளிர் தின கொண்டாட்டம்

இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2021-03-08 19:27 GMT
இளையான்குடி,

இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக அனைத்து மகளிர் பணியாளர்கள், கிராம நிர்வாக பெண் அலுவலர்கள், கிராம பெண் உதவியாளர்கள் என அனைவரும் நேற்று மகளிர் தின விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அப்போது அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அலுவலகத்துக்கு வந்த பெண்களுக்கு வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினார்கள். அலுவலகத்தில் பணியாற்றிய பெண் பணியாளர்கள் அனைவரும் ஒரே சேலையில் வந்து ஒருவருக்கொருவர் மகளிர் தின வாழ்த்துக்களை சொல்லி கொண்டனர்.

மேலும் செய்திகள்